Wednesday, July 23, 2008

Shirdi Sai Baba Vrat in Tamil Language.

Share Author: Manisha.Rautela.Bisht on 10:48 AM
Dear Readers,
Happy Baba's day to all ,
After a long wait Sai Vrat Katha in Tamil complete book is now uploaded in blog after Telugu and other languages.Sai devotee sister Priya Nagarathinam really worked very hard to type the whole content for benefit of all Sai devotees in Tamil script,with Baba's blessing she could do this task .I thank Priya sister for extending these details for all Sai devotees who were looking and searching for this Sai Vrat in Tamil for quite a long time.My heartfelt thanks to her and may Baba bless her abundantly .I have already uploaded Sai Vrat Katha in many other languages along with scanned version for download in my previous post .I am again updating the details for the devotees in the end of this post .Devotees can download as per to their choice by going through the given list in the end.Jai Sai Ram .

Sri Sai Vratha Kathai
ஸ்ரீ சாயி விரத கதை

கோகிலா என்னும் பெண்மணியும் அவர் கணவர் மஹேஷும் குஜராத்தில் ஒரு ஊரில் வசித்து வந்தனர்.இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர்.ஆனால் மஹேஷ் அவர்களோ
சுபாவத்தில் சண்டைகாரராக இருந்தார்.வரைமுரையற்ற பேச்சு சிடுமூஞ்சித்தனம் நிறைந்தவராக இருந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரது சுபாவத்தினால் தொல்லை அடைந்தனர்.ஆனால் கோகிலா அம்மாளோ மிகுந்த ஒழுக்கநெறியுள்ள பெண்மணியாக இருந்தார்.இறைவன் மேல் தீரா நம்பிக்கை கொண்டு அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் வியாபாரம் நஷ்டமடைய ஆரம்பித்து நாளடைவில் ஒரேயடியாக வருமானமும் நின்று போய் விட்டது. மஹேஷ் வீட்டிலேயே இருக்கத் துவங்கினார்.அதனால் இன்னும் அவர் சுபாவம் மோசமடைய ஆரம்பித்தது.முன்பை விட அதிக சிடுமூஞ்சி ஆனார்.

ஒரு மதிய நேரம் ஒரு முதிய சாது அவர் வீட்டுக் கதவருகில் நின்றார்.முகத்தில் அபூர்வமான ஒளியும்,தேஜசும் நிறைந்து இருந்தது.அவர் கோகிலாவிடம் சாதம்,பருப்பு அளிக்கும்படிக் கேட்டார்.கோகிலாவும் சாதம்,பருப்பு அளித்து இரு கை கூப்பி நமஸ்காரம் செய்தார்.”சாதுவும் சாயி உங்களை சுகமாக வைப்பார்” என்று ஆசிர்வதித்தார்.

கோகிலா அம்மாளூம், “ஐயனே! சுகம்,சாந்தி எங்கள் விதியிலேயே இல்லை போன்று இருக்கிறது.” என்று வருத்தமாகக் கூறித் தன் துன்பம் நிறைந்த கதையைக் கூறினார்.

சாதுவும் சாயிபாபாவின் விரதத்தை பற்றிக் கூறினார்.9 வியாழக்கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் அல்லது ஒரு வேலை உணவு உட்கொண்டு முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரதம் 9 வாரம் செய்து விதி முறைப்படி நிறைவு செய்யவும் . ஏழைகளுக்கு உணவு அளித்து சாயி விரத புத்தகங்களை தன்னால் இயன்ற அளவு 5,11,21 என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கவும். இப்படி சாயி விரதத்தின் மஹிமையைப் பரப்பினால் சாயிபாபா உங்கள் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றுவார்.இந்த விரதம் கலியுகத்திற்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம்.இந்த விரதம் கண்டிப்பாக மிகுந்த பலன்கள் அளிக்க வல்லது ஆனால் விரதமிருப்போர் சாயிபாபாவின் மேல் மிகுந்த பக்தியும்,நம்பிக்கையும் வைத்தல் அவசியம்.யார் மேற்கூறியபடி விரதமும் நிறைவும் செய்கிறார்கேளா, சாயிபாபா அவர்களுடைய விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

கோகிலா அம்மாளும் 9 வியாழக்கிழமைகள் விரதம் இருந்து 9ஆவது வியாழனன்று ஏழைகளூக்கு உணவு அளித்தார்.சாயி விரத புத்தகங்களை விநியோகித்தார்.அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவு பெயரளவுக்குக் கூட இல்லாமல் போய் விட்டது. வீட்டில் பெரும் சுகம் ஆனந்தம் நிலவியது.அதேசமயம் மஹேஷின் சுபாவமும் மாறி அவருடைய வியாபாரமும் சூடு பிடித்தது.சிறிது நாட்களிலேயே ஆனந்தமும் செல்வமும் பெருகியது.கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாய் வாழலாயினர்.

ஒரு நாள் கோகிலா அம்மாளின் மைத்துனரும், மைத்துனர் மனைவியும் சூரத்திலிருந்து வந்தனர். பேச்சோடு பேச்சாக தங்கள் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பரீட்சையில் ஃபெயில் ஆகி விட்டனர் என்றும் வருத்தப்பட்டனர். கோகிலா 9 வியாழக்கிழமைகள் விரதத்தின் மஹிமை பற்றிக் கூறினார். சாயி பக்தியினால் குழந்தைகள் நன்கு படிக்கத் துவங்குவர். ஆனால் சாயிபாபாவின் மேல் அதீத விஸ்வாசமும், நம்பிக்கையும் வைத்தல் அவசியம்.சாயி அனைவருக்கும் அருள் புரிவார் என்று கூறினார்.

அவர் மனைவி விரத முறைகளைக் கேட்டார். கோகிலா கூறலானார்.” 9 வியாழக் கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் உட்கொண்டு முடியாதவர்கள் ஒரு வேலை உணவு அருந்தி இந்த விரதம் செய்ய வேண்டும் ,முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்கு 9 வியாழனும் செல்லவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும்.”மேலும்
இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு பூஜை செய்யவும்.
மஞ்சள் நிறமலர்கள் மாலை அணிவித்து ,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம் நிவேதனம் செய்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.

சாயி விரத கதை, சாயி ஸ்மரணை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

9ஆவது வியாழக் கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்
9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
சூரத்திலிருந்து அவர் மைத்துனர் மனைவியின் கடிதம் சிறிது நாட்களிலேயே வந்தது.அதில் அவர் குழந்தைகள் சாயி விரதம் இருப்பதாகவும் மிக நன்றாக படிக்கத் துவங்கி விட்டனர் என்றும் எழுதி இருந்தார்.மேலும் அவரும் இந்த விரதம் இருந்ததாகவும் ,விரத புத்தகங்களைஆபிசில் விநியோகம் செய்ததாகவும் எழுதி இருந்தார்.அதை பற்றி அவர் எழுதுகையில் அவர் தோழி சாருவின் மகளுக்கு சாயி விரத பலனாக மிக நல்ல இடத்தில் வரன் அமைந்து நல்ல விதமாக திருமணம் நடந்தது.அவர் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் நகைப்பெட்டி தொலைந்து போய் இருந்தது.அவரும் சாயி விரதம் இருந்தார். 2 மாதங்களுக்குப் பிறகு நகைப்பெட்டி திரும்பக் கிடைத்து விட்டது. (யார் திரும்ப கொண்டு வைத்தார் என்று தெரியாது)இப்படி பல அற்புதங்கள் நடந்தன

கோகிலா அம்மையாரும் சாயி விரத மஹிமையை நன்கு புரிந்து கொண்டார்.ஓ !சாயி !இப்படி எல்லோர் மேலும் பொழியும் ¸Õ¨½ என் மேலும் பொழிவீராக!

....................................................................................




9 Thursday's Sai Vrat Rules and Procedure.
9 வியாழக்கிழமை சாயி விரத விதிமுறைகள்


1. இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
2. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.3. எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும்4. காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.இந்த விரதத்தைபழ,திரவியஆகாரங்கள்(பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும்.அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது
5. ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்
6.மஞ்சள் நிறமலர்கள் மாலை சாயிபாபா படத்திற்கு அணிவித்து,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம்.(பழங்கள், இனிப்புகள்,கற்கண்டு எதுவானாலும்) நைவேத்தியம் வைத்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.
7. முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். ÓÊ¡¾Å÷¸û வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாயி விரத கதை, சாயி ŠÁè½, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.
8.வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.9. விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்
விரத நிறைவு விதிமுறைகள்
1. 9ஆவது வியாழக் கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்(உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
2. சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்¸¨Ç நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்,சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
3. விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும்.இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்
4. மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும்,விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.இÐ சாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .

----------------------------------------------------------



Shree Shirdi Saibaba Ashtothra Sathanamavali

ஸ்ரீ ஷீரடி சாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி


1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம:

2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம:

3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:

4.ஓம் சேஷ சாயினே நம:

5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:

6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:

7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

8.ஓம் பூதாவாஸாய நம:

9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:

10.ஓம் காலாதீதாய நம:

11.ஓம் காலாய நம:

12.ஓம் காலகாலாய நம:

13.ஓம் காலதர்பதமனாய நம:

14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

15.ஓம் அமர்த்யாய நம:

16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம:

17.ஓம் ஜீவாதாராய நம:

18.ஓம் ஸர்வாதாராய நம:

19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:

20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம:

22.ஓம் ஆரோக்யஷேமதாய நம:

23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:

24.ஓம் ருத்திஸித்திதாய நம:

25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:

26.ஓம் யோகஷேமவஹாய நம:

27.ஓம் ஆபத்பாந்தவாய நம:

28.ஓம் மார்க்கபந்தவே நம:

29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:

30.ஓம் ப்ரியாய நம:

31.ஓம் ப்ரீதிவர்தனாய நம:

32.ஓம் அந்தர்யாமினே நம:

33.ஓம் ஸச்சிதாத்மனே நம:

34.ஓம் ஆனந்தாய நம:

35.ஓம் ஆனந்ததாய நம:

36.ஓம் பரமேச்வராய நம:

37.ஓம் பரப்ரம்ஹணே நம:

38.ஓம் பரமாத்மனே நம:

39.ஓம் ஞானஸ்வரூபிணே நம:

40.ஓம் ஜகத பித்ரே நம:

41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:

42.ஓம் பக்தாபயப்ரதாய நம:

43.ஓம் பக்த பாராதீனாய நம:

44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:

45.ஓம் சரணாகதவத்ஸலாய நம:

46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:

47.ஓம் ஞான வைராக்யதாய நம:

48.ஓம் ப்ரேமப்ரதாய நம:

49.ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

51.ஓம் கர்மத்வம்சினே நம:

52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:

53.ஓம் குணாதீத குணாத்மனே நம:

54.ஓம் அனந்த கல்யாண குணாய நம:

55.ஓம் அமித பராக்ரமாய நம:

56.ஓம் ஜயினே நம:

57.ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம:

58.ஓம் அபராஜிதாய நம:

59.ஓம் த்ருலோகேக்ஷு அஸ்கந்திதகதயே நம:

60.ஓம் அசக்யராஹிதாய நம:

61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:

62.ஓம் ஸுரூபஸுந்தராய நம:

63.ஓம் ஸுலோசனாய நம:

64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:

65.ஓம் அரூபாவ்யக்தாய நம:

66.ஓம் அசிந்த்யாய நம:

67.ஓம் ஸுக்ஷ்மாய நம:

68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:

69.ஓம் மனோவாக தீதாய நம:

70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

71.ஓம் ஸுலபதுர்லபாய நம:

72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம:

73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம:

74.ஓம் ஸர்வபாரப்ருதே நம:

75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம:

76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:

77.ஓம் தீர்த்தாய நம:

78.ஓம் வாஸுதேவாய நம:

79.ஓம் ஸதாம் கதயே நம:

80.ஓம் ஸத்பராயணாய நம:

81.ஓம் லோகநாதாய நம:

82.ஓம் பாவனானகாய நம:

83.ஓம் அம்ருதாம்சவே நம:

84.ஓம் பாஸ்கரப்ரபாய நம:

85.ஓம் ப்ரஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:

86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம:

87.ஓம் ஸித்தேச்வராய நம:

88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:

89.ஓம் யோகேச்வராய நம:

90.ஓம் பகவதே நம:

91.ஓம் பக்தவத்ஸலாய நம:

92.ஓம் ஸத்புருஷாய நம:

93.ஓம் புருஷோத்தமாய நம:

94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:

95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:

97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:

98.ஓம் தஷிணாமூர்த்தயே நம:

99.ஓம் வேங்கடேசரமணாய நம:

100.ஓம் அத்புதானந்தசர்யாய நம:

101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:

102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:

103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:

104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:

105.ஓம் ஸர்வ மங்களகராய நம:

106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:

107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:

108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:



மங்களம் ****** மங்களம் ****** மங்களம்
----------------------------------------------------


Shree Thaththaathreya Bavani
ஸ்ரீ தத்தாத்ரேய பாவனி


ஜய யோகீஸ்வர தத்த தயாளா,

ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா

அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய்,

ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்

பிரம்மா, ஹரிஹரரின் அவதாரம்,

சரணாகதர்களின் பிரணாதாரம்

அந்தர்யாமி,சத்சித் ஆனந்தன்,

பிரசன்ன சத்குரு இருதோளுடையன்

அன்னபூரணி யை தோளில் வைத்தாய்,

சாந்தி கமண்டலம் கரமேந்தினாய்

நாலு,ஆறு பல தோளுடையான்,

அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்

நின்சரண் புகுந்தேன் அறியாமூடன்,

வாரும் திகம்பரா ! போகுதே பிராணன்

அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே,

அக்கணமே பிரசன்னம் ஆனாயே

அளவிலா ஆனந்தம்.சித்தி அளித்தாய்,

முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய்

இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்?

உனையன்றி எனக்கில்லை புகலிடம்

விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய்,

அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய்

ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே,

தயை புரிந்தாய் நீ அமரருக்கே

மாயை பரப்பி திதிசுதனை,

இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய்

அளவிலா லீலைகள் புரிந்தாயே,

அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே

நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய்,

மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய்

சாத்யதேவ,யது,பிரஹ்லாத,பரசுராமருக்கே,

போதித்தாய் நீ ஞானோபதேசமே

அளவிலா ஆருள் ஆற்றல் உடையோனே,

என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே

உன் தரிசனம் காணாமல் நானுமே,

இறுதி காணேன்,வாரீர் இக்கணமே

த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே,

பிறந்தாய் நீ அவளின் மகனாகவே

ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே,

படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே

வயிற்று வலியில் துடித்த அந்தணனை காத்தாயே

வல்லபேசனை கயவ காலனிடமிருந்து காத்தாயே

என்னைப்பற்றிய அக்கறை உனக்கில்லையே,

என்னை நினைப்பாய் ஒரு முறையேனுமே

தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம்,

என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம்

முதிய மலட்டு பெண்ணின் கனவினையே,

சேய் அளித்து பூர்த்தி செய்தாயே

அந்தனின் வெண்குஷ்டம் நீக்கினாயே,

அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே

மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய்,

அந்தணனின் தரித்திரம் போக்கினாய்

அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய்,

அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய்

பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய்,

தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்

கொடூர முன்வினையைப் போக்கினாய்,

கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய்

மதோன்மத் புலையனிடம் தோற்றனரே,

பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே

பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே,

ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே

ஒரே நேரத்தில் எடுத்தாய் எட்டு ரூபங்களே,

உருவமற்றும் பலரூபமுடையவனே

தரிசனம் பெற்று தன்யமானரே,

ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே

யவனராஜன் வேதனை நீக்கினாயே,

ஜாதிமத பேதம் உனக்கில்லையே

ராம கிருஷ்ண அவதாரங்களிலே,

நீ செய்த லீலைகள் கணக்கில்லையே

கல்,கணிகை,வேடம்,பசு,பட்சியுமே.

உன்னருளால் முக்தி அடைந்தனரே

நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே,

உன் நாமம் நல்காத நன்மையில்லையே

தீவினை,பிணி துன்பம் தொலையுமே,

சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே

பில்லி, வசிய தந்திரம் இம்சிக்காதே,

ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே

பூத,சூனிய,ஜந்து அசுரர்,ஓடிடுமே,

தத்தர் குண மஹிமை கேட்டதுமே

தத்தர் புகழ் பாடும் தத்த பவானியையே,

தூபமேற்றி தினம் பாடுபவனுமே

இரு லோகத்திலும் நன்மை பெறுவானே,

சோகம் என்பதை அறியானே

யோக சித்தி அவன் அடிமையாகுமே,

துக்க தரித்திரம் தொலைந்திடுமே

ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே,

தத்த பவானி அன்புடன் படித்தாலே

நிதமும் பக்தியுடன் படித்தாலுமே,

நெருங்கான் அருகில் காலனுமே

அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே,

தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே

ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே,

தத்த திகம்பரா நீ தான் இறைவனே

வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே,

வேதம் பிறந்தது உன் மூச்சினிலே

சேஷனும் வர்ணித்து களைப்பானே,

பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே

நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே,

உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே

தவசி தத்வமசிஅவன் இறைவனே,

பாடு மனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே

பாவனி - ஐம்பத்திரு பாட்டு வரிகள்

ஸ்மர்த்துகாமி - ஸ்மரித்தவுடன் ஓடி வருபவர்

திதிசுதன் ராக்ஷஸன்

அர்ஜுனன் - ஸஹஸ்ரார்ஜுனன்

த்விஜ - இருமுறை பிறவி எடுத்த அந்தண வைசிய

க்ஷத்திரிய குலத்தோர்

-------------------------------------



Shree Saibaba Pamalai

ஸ்ரீ சாயி பாபா பாமாலை

ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்

ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்

கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்

அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்

பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்

பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்

ஞானம் அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்

நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்

திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்

தேஜஸ், ஸௌம்யம் நிறைந்த உருவமாய்

வெய்யில்,மழை பாராமல் தவமும் செய்தாய்

பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்

உன் தாய் தந்தை குலம் யாரும் அறியாரே

உலகம் என் வீடு,இறை என் தாய் என்றாயே

சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்

சிலர் அறிந்தனர் நீ விஷ்னுவின் ரூபம்

தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீ தானா?

பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீ தானோ?
எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்

பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்

எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்

எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்

தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதை தான்

கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்

மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்

உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்

சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்

திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்

ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்

அருளோடு சேர்த்து அற்புத அனுபவங்களும் தந்தாய்

மசூதித்தாயாம் துவாரகாமாயி!அதில் வசித்து,

பக்தர்களை ரட்சிக்கும் நீஅன்னையன்றோ? சாயி

திருகரமளித்த உதி அருமருந்தாகும் - உன்

திருஅருட்பார்வை என் துயரினை போக்கும்

அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும்-உன்

திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்

அடைக்கலம் புகுந்தோரை அன்புடன் ரட்சித்தாயே-உன்

அற்புத லீலைகள் அமுதே!அமுதினும் இனிய பேரமுதே

நீருற்றி அகல் தீபங்கள் எரியச் செய்தாய்

ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்

பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,

துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே

தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு

வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு

உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே

அளித்தாய் மாங்கனிகள்அடைந்தார் தாமு சந்தானமே

விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே

நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே

சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,

உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே

பக்தருக்குள்ளே இல்லை ஏற்றத்தாழ்வே

மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே

உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே

உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே

கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே

தாஸ்கனுவின் ப்ரயாகை தாகம் தணித்தாயே

மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்

பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்

ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே

ஷீர்டியின் கல்,புல் கூட பேறு பெற்றதே

உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே

அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே-உன்

திருவடியை என் சிரஸேந்தி களித்திறுப்பேனே

எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே

இக்கணம் உனைத்தொழும் பேறு பெற்றேனே

இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே

உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே

உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே

என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே

உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே

உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே

உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,

என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே

உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே

நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே

என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே

நிஜந்தனிலே நிதமும் என் துனை நிற்பாயே

அணுவிலும் அணுவானாய்,அகில அண்டமும் நீயானாய்

எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்

என் அன்னை நீ! தந்தை நீ! இவ்வுலகையே!

மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ

அகிலம் உன் இல்லம்,அண்ட சராசரம் உன் ரூபம்

அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்

குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே.

உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்

சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்

சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்

சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே

சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே

நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே

துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே

சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே

சாயி விரதத்தால் சுகம் , சாந்தி வீட்டில் நிலவிடுமே

சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,

ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,

சாயி வருவார்,இரங்குவார் நம்மிடமே,

துன்பம் களைவார்,தருவார் ஆனந்தமே,

சாயியே சாச்வதம்!சாயியே சத்தியம்!

இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்

சாயியே பரமேஸ்வரன்,சாயியே பரமாத்மன்

சாயியே பராசக்திரூபன்,சாயியே பரந்தாமன்

நம்பிக்கை பக்தி ,பொறுமையுடன் சரணடைவோம்

சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்

ஸ்ரீ சாயிநாதருக்கே அர்ப்பணம்.


---------------------------------

Shree Sai Smaran
ஸ்ரீ சாயி ஸ்மரணை


வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
பக்தர் உம்மை அழைக்கின்றோம்!
விருப்பம் ஈடேற வேண்டும்!
பக்தி பலமுற வேண்டும்!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

துக்கம் போக்க வாரும் சாயி!
ஆனந்தம் அளிக்க வாரும் சாயி!
சேய் உம்மை அழைத்தேன் சாயி!
தாய் மனதோடு இலகுவாய் சாயி!
வாரும் சாயி,வாரும் சாயி!

கீர்த்தனம் சாயி, பூஜை சாயி!
வாழ்வும் சாயி, வளமும் சாயி!
ஆனந்தம் சாயி, செல்வம் சாயி!
அற்புதம் சாயி,அபயம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஷீர்டி வாசி எங்கள் சாயி!
பக்தரின் இனிய அன்பர் சாயி!
கருணைக் கடலே எங்கள் சாயி!
அருள் பார்வை பாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

கிழக்கும் சாயி,மேற்கும் சாயி!
வடக்கும் சாயி,தெற்கும் சாயி!
எத்திசையில் நீ இருந்தாலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!
ஜீவன் சாயி,யாத்திரை சாயி!
யேசு சாயி, குருநானக் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

தர்மம் சாயி ! கர்மம் சாயி!
தியானம் சாயி!தானம் சாயி!
தூணிலும் சாயி துரும்பிலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

திருப்தி சாயி முக்தி சாயி!
பூமி சாயி ஆகாயம் சாயி
சாந்தி சாயி ஓம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சத்யம் சாயி, சிவம் சாயி!
சுந்தரம் சாயி ஈச்வரன் சாயி!
இரக்கம் சாயி எளியவர் சாயி!
அன்பு சாயி அமைதி சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சக்தி சாயி பக்தி சாயி!
சிவன் சாயி விஷ்னு சாயி!
ப்ரஹ்மா சாயி பஞ்சபூதம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

------------------------------------------------------------------
Please Note :
Dear readers,
I am compliling the list of all the sources of Sai Vrat which are available in this blog for ready reference of the devotees.Devotees can download the material of their choice just by clicking on the link in the list .

Shri Sai Vrat Katha Complete Book :
Scanned version of Sai Vrath Katha for download.
Following list is part of Sai Vrat Katha Book available in blog and more shall be added soon.

Devotees are also requested to forward any other source or material of Sai Vrat in other languages to me in my ID so that it can be posted in the blog for benefit of other devotees.Jai Sai Ram.

Disclaimer: Shirdi Sai Baba had never laid emphasis on fasting. A Devotee of Baba had started this vrat initially and the vrat has fulfilled many wishes .So its upto the readers discretion to observe this vrat or not.

logo© Shirdi Sai Baba Sai Babas Devotees Experiences Sai Baba Related all Details


Loading
<>

If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to my regular Email Updates. Subscribe Now!


Kindly Bookmark and Share it:

0 comments:

Have any question? Feel free to ask.

~श्री सच्चिदानंद सदगुरू श्री साईनाथ महाराज की जय~ श्री साई बाबा के ग्यारह वचन : १.जो शिरडी आएगा ,आपद दूर भगाएगा,२.चढ़े समाधी की सीढी पर ,पैर तले दुःख की पीढ़ी पर,३.त्याग शरीर चला जाऊंगा ,भक्त हेतु दौडा आऊंगा,४.मन में रखना द्रढ विश्वास, करे समाधी पुरी आस५.मुझे सदा ही जीवत जानो ,अनुभव करो सत्य पहचानो,,६.मेरी शरण आ खाली जाए, हो कोई तो मुझे बताये ७.जैसा भाव रहे जिस मनका, वैसा रूप हुआ मेरे मनका,,८.भार तुम्हारा मुझ पर होगा ,वचन न मेरा झूठा होगा ९ आ सहायता लो भरपूर, जो माँगा वो नही है दूर ,१०.मुझ में लीन वचन मन काया ,उसका ऋण न कभी चुकाया,११ .धन्य -धन्य व भक्त अनन्य ,मेरी शरण तज जिसे न अन्य~श्री सच्चिदानंद सदगुरू श्री साईनाथ महाराज की जय~
Leave Your Message.
 

About Author.

I feel I am like a river, having my own course, stream and flow but the final destiny is to be one with the boundless ocean of my Sathguru Shirdi Sai Baba.

Amidst all the worldly rituals I am performing,I do not dare to loose sight of my Sainath. He is the sole driving force, the guide and the Supreme master.

The strings of my life are in his hand,I am just a puppet at His Holy Feet.
Read View My Complete Profile.
Related Posts with Thumbnails

Bookmark.

Share on Facebook
Share on Twitter
Share on StumbleUpon
Share on Delicious
Share on Digg
Bookmark on Google
Email Receive Email Updates
If you like what you are reading, mention this in your post or link to this site by copying-pasting this HTML code into your own blog/website.
Creative Commons License This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 South Africa License.Best Viewed in 1024 x 768 screen resolution © All Rights Reserved, 2009-2010 .